வேலூர் தொரப்பாடி பகுதியில் பாகாயம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முபாரக் (21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் வேலூர் பெரியார் பூங்கா அருகே கஞ்சா விற்ற வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த விக்னேஷ்குமாரை (30) வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் கைது செய்தார். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.