வாணியம்பாடி: தூக்கி வீசப்பட்ட ஊராட்சி செயலாளர்

5177பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவா புதூர் பகுதியை சேர்ந்தவர் குணாநிதி (வயது 38) இவரது மனைவி கலையரசி இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் கோவிந்தாபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் கணவா புதூர் பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இன்று காலை அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் இயக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் மோட்டார் இயக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி