வேடந்தாங்கல் கோவிலில் பங்குனி உத்திர திருகல்யாண வைபவம்

58பார்த்தது
வேடந்தாங்கல் கோவிலில் பங்குனி உத்திர திருகல்யாண வைபவம்
பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் குன்றின்மேல் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக காலையில் வள்ளி, தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஜனை கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் 108 பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 

பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பக்தர்கள் அலங்குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்து மாலை அணிவித்தல், சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி - வள்ளி, தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி