கேரளா: கோழிக்கோடு அருகே தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பொக்குன்னு பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவரின் ஆண் குழந்தை மொஹமட் இபாத். நேற்று முன்தினம் குழந்தை பாட்டில் மூடியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வாயில் போட்ட நிலையில், தொண்டையில் சிக்கியது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தான். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த சம்பவம் மனைவி வீட்டில் நடந்ததாகவும் நிசார் போலீசில் புகார் அளித்துள்ளார்.