சென்னை திருவொற்றியூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிபதியின் உத்தரவுப்படி சிறுவனை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக எந்த வித அசம்பாவிதமும் நிகழ்வதற்கு முன் கண்டறியப்பட்டு கற்கள் அகற்றப்பட்டது.