மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி, நடப்பு அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி.யாக கமல்ஹாசன் மாநிலங்களவை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.