வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்த போது அங்குவந்த நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு மாவட்ட செயலாளரை தாக்கியதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன், இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் நிலையில்,
தேவேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது தேவேந்திரன், நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், யாரிடம் கூட்டு வைக்கவில்லையெனவும், தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை, படித்தவர்களை வேட்பாளராக முன்நிறுத்திய போது, அதை சீமான் மறுத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியபோது, அங்குவந்த நாம் தமிழர் கட்சியினர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர், அப்போது நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ் என்பவர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சரமாரியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,