வரும் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு!

69பார்த்தது
வரும் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிகிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் திருப்பத்தூரை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ. டி. ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி