வாழ்க்கையில் சுயமரியாதையுடன் நடந்து கொள்வதற்கு கல்வி மிக மிக அவசியம். வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுரை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்காண எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பேசியதாவது: -
பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பாலியல் தொந்தரவு செய்கின்ற போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் பேசியதாவது: -
பெண்கள் கல்வியை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் ஏனென்றால் வாழ்க்கையில் சுயமரியாதையுடன் நடந்து கொள்வதற்கு கல்வி மிக மிக அவசியம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் சுனா கைசர் அஹமத், கல்லூரி முதல்வர் ரேணு, மாவட்ட மனநல மருத்துவர் பிரபாவாராணி மற்றும் அரசு அலுவலர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.