திருவலத்தை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று பக்தர்கள் பரணி காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிமுறை மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு மலை மீது சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பரணி தினத்தை ஒட்டி மலைமேல் உள்ள வள்ளி தெய்வானை சமித சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கவசம் விபூதி காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று வள்ளி மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சரவணப் பொய்கை தெப்பக்குளத்தில் இன்று இரவு 7: 30 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.