புனித யாத்திரை மேற்கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி

78பார்த்தது
புனித யாத்திரை மேற்கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி
வாணியம்பாடி தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு மரியாதை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு
மரியாதை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே. பி. எஸ். மாதேஸ்வரன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே. பி. எஸ். மாதேஸ்வரன் தலைமை வகித்தார். வி. குமரகுரு, ஜி. செல்வமணி, கே. வெங்கடேசன்,
வினோத் ஸ்ரீதரன், சீனிவாசன் ஏ. பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சையத் சகாபுதீன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் வணிகர்கள் முன்னா, ஜீஷான், முகீத் அஹமத், ஆசிம், ஷபீ ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி தொழில் வணிகர்களின் பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் எஸ். அருண் குமார் நன்றி கூறினார்.

டேக்ஸ் :