`ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் உள்ளிட்டோரின் வீட்டு பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், கண் முன்னே இளைய சமுதாயம் அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? என கேள்வியெழுப்பியுளார்.