கர்நாடகா: தொண்டமாடிஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நரசிம்மமூர்த்திக்கு சொந்தமான தோட்டத்தில் ஷஷாங் என்பவர் குடும்பத்துடன் வேலை பார்க்கிறார். அவரின் 3 வயது குழந்தை அபிஷேக்குடன், உறவினர் மகனான 13 வயது சிறுவன் நேற்று (பிப். 17) விளையாடினான். அப்போது நரசிம்மமூர்த்தியின் துப்பாக்கியை பொம்மை துப்பாக்கி என நினைத்து சிறுவன் சுட்டதில் குழந்தை உயிரிழந்தது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.