வரும் 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் EPS நம்பிக்கையுடன் கூறி வருகிறார். அதன் அடிப்படையில் தொகுதிவாரியாக பூத் கமிட்டி அமைத்தல், கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல் போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. திமுகவின் எதிர்ப்பு வாக்குகளையும், இளம் தலைமுறையினர் வாக்குகளை பெறவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.