வாணியம்பாடி அருகே 85 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை!

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பத்மாவதி இவர் காவலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் தனது மகளை நாமக்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக கடந்த 6 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்று இன்று மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 சவரன் நகை மற்றும் 4. 75 இலட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இது குறித்து ஆசிரியை பத்மாவதி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


மேலும் வீட்டின் உரிமையாளர் என்பது சவரன் திருடு போனதாக கூறிய நிலையில் காவல் உதவி ஆய்வாளர் 55 சவரன் தான் திருடு போனது என வழக்கு பதிவு செய்ததாக ஆசிரியை பத்மாவதி குற்றம் சாட்டியுள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி