கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

71பார்த்தது
வேலூர் ஓட்டேரி பகுதியில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானம் அருகே நின்று கொண்டிருந்த வேலூர் அக்ராவரம் பாரதிநகரை சேர்ந்த தனுஷ் (வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வேலூர் வடக்கு போலீசார் தோட்டப்பாளையம் அருகந்தபூண்டியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த விக்கியை (26) கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி