கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது!

79பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், அன்பழகன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆதி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஆற்றோரம் ரோந்து சென்றனர்.

அப்போது அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே 3 பேர் நின்றிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தபோது அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்த சூர்யா (வயது 26), சித்தாத்தூரை சேர்ந்த தமிழரசன் என்ற சந்தோஷ் (23) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததும் தெரிய வந்தது.

இதனை அவர்கள் ஆந்திர மாநிலம் பலமனேர் அருகே காலவபல்லி பகுதியில் இருந்து வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி விற்க வைத்திருந்ததாக கூறினர். மேலும் கடந்த 21-ந் தேதி குடியாத்தம் டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தேவராஜ் (35) என்பவரை தாக்கிய சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா, தமிழரசன் உள்ளிட்டவர்களை தேடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி