நில முழுவதில் ஏற்பட்ட தகராளில் இரு தரப்பு பெண்களுக்கு சண்டை

70பார்த்தது
*திருப்பத்தூர் அருகே நிலம் உழுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பு பெண்களுக்கும் இடையே குடிமி புடி‌ சண்டை! துப்பாக்கி கொண்டு வா மாமா அவங்களை சுட்டு விடலாம் என கூறியதால் பரபரப்பு! *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சனேரி பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் இடையே 2. 5 ஏக்கர் அளவில் நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சுந்தரி அந்த இடத்திற்கு உண்டான பட்டா தன்னிடம் உள்ளதாக கூறி அந்த நிலத்தை உழுது பயிரிட டிராக்டரை அழைத்து வந்தபோது சுந்தரி தரப்பினருக்கும் கோவிந்தசாமி தரப்பினருக்கும் இடையே உள்ள பெண்களுக்கு பயங்கர குடுமிபுடி சண்டை நடைபெற்றது.


இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த நேரத்தில் கோவிந்தசாமி திடீரென அங்கிருந்து சென்று டிராக்டரை எடுத்து வந்து ஏர் உழக வந்த மற்றொரு டிராக்டர் மீது அதிவேகமாக மோதினார்.

இதனால் இது தரப்பினருக்கும் இடையே தகராறு உருவாகி பெரிய போர்க்களமாக மாறியது.

அப்போது சாந்தி என்பவர் கோவிந்தசாமியை பார்த்து மாமா துப்பாக்கி கொண்டு வா மாமா அனைவரையும் சுட்டு தள்ளிவிடலாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி