மது அருந்தாத நபர்களுக்கு வரும் ‘நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்’ என்கிற நோய் தற்போது அதிகரித்து வருகிறது. கல்லீரலில் சேரும் அதிகப்படியான கொழுப்பானது, கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. உடல் பருமன், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், உணவுப் பழக்க வழக்கங்கள், துரித உணவுகள், அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் நோயின் ஆபத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.