அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

82பார்த்தது
அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!
திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கு இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு தேற்று தொடங்கியது.

இம்முறை மாணவர்கள் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகியவற்றில் சேர்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டினர். இணையதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளும் கல்லூரிக்கு வந்து தாங்கள் விண்ணப்பித்த இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு கல்லூரியின் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய பணியாணை பெற்றுள்ளார்கள்.

கல்லூரி வேலைவாய்ப்பு திட்ட மையம் மூலமாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணி ஆணை பெற்றார்கள் இவற்றிற்கு காரணமான கல்லூரி வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் உமா மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பொன்னிவளவன் ஆகியோரை கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி