"பாகிஸ்தான் அணி மூளையைப் பயன்படுத்தவில்லை"

81பார்த்தது
டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "உண்மையில் இந்த தோல்வி கவலையளிக்கிறது. பாகிஸ்தான் அணி மூளையைப் பயன்படுத்தவில்லை. ஃபகர் சமான் களத்தில் இருந்த போது 47 பந்துகளில் 46 ரன்கள்தான் தேவைப்பட்டது. 7 விக்கெட்கள் கைவசமிருந்தது. கண்டிப்பாக இந்த ஆட்டத்தில் வென்றிருக்க வேண்டும். இந்த தோல்வி ஏமாற்றத்தையும், வலியையும் தருகிறது" என கூறியுள்ளார்.

நன்றி: பிபிசி நியூஸ் தமிழ்.

தொடர்புடைய செய்தி