எஸ்.சி/ எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை

71பார்த்தது
எஸ்.சி/ எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பை முடித்த எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு இலவசமாக சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வயது வரம்பு 18 - 27 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.1000 உதவித்தொகை மற்றும் இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரங்களுக்கு 0444-24615112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.