சக்தி தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

80பார்த்தது
சக்தி தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
திருப்பத்தூர் டவுன் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சக்தி தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால பூஜை, யாகவேள்வி நடந்தது. உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து குண்டங்கள் மற்றும் கணபதி, சக்தி மாரியம்மன், தண்டு மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு பல விதமான யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு இரண்டாம் கால யாக சாலை பூஜை, தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து மூன்றாம் கால பூஜை சங்கல்பம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கங்கை, யமுனை போன்ற முக்கிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் பூஜை செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷமிட்டனர். சில பெண்கள் சாமி வந்து ஆடினர். தொடர்ந்து சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி