முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்!

58பார்த்தது
முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்!
திருப்பத்தூரை அடுத்த குனிச்சி அருகே செவ்வனூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், கணபதி பூஜை, நவதானியம் முளையிடுதலுடன் தொடங்கியது.

சாமி கரிகோலம் ஊர்வலம் வருதல், முளைப்பாரி ஊர்வலம், கணபதி பூஜை, அனுக்ஞை, ஆச்சார்யவரணம், புண்ணியாக வாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதல் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றது.

பின்னர், தாய்வீட்டு தட்டுவரிசை எடுத்து வருதல், 2-ம் கால யாகசாலை பூஜைகளுடன் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து விஸ்வருப தரிசனம், பொதுமக்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி