பிரபல நடிகை பாவனாவுக்கு விவாகரத்து?

58பார்த்தது
பிரபல நடிகை பாவனாவுக்கு விவாகரத்து?
பிரபல நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாகத் தனது கணவர் குறித்து தனது சமூக வலைதளத்தில் எந்தப் பதிவையும் பாவனா வெளியிடவில்லை என்பதால் அவர் கணவரைப் பிரிவதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் பாவனா, “அதில் எந்த உண்மையும் இல்லை, சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற கதைகளை உருவாக்குகிறார்கள். எனது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி