ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் வட்டாட்சியர் அலுவலருக்கும் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை முன்னிலையில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவினர் ஒன்றிணைந்து ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம் எல் ஏ நல்லதம்பி, மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்