கந்திலி அருகே நத்தம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வலட்சுமி (வயது 40). இவர் தனது வீட்டின் அருகே வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக கந்திலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செல்வலட்சுமி தனது வீட்டின் அருகே வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.