*திருப்பத்தூர் சேலம் நான்கு வழி சாலையின் நடுவே உள்ள குழியை மூடாமல் மெத்தனம் காட்டும் நெடுஞ்சாலை துறை. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. *
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சேலம் நான்கு வழி சாலை டிஎம்சி காலனி அருகே சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினால் பேருந்து லாரி போன்ற கனரக வாகனங்கள் முன்னால் செல்லும்போது பின்னால் வருகின்ற இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் இந்த பள்ளத்தை சீரமைக்க கோரி பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றும் சிறிது அழுத்தம் கொடுத்து கோரிக்கை வைத்தால் கடமைக்கு கொஞ்சம் ஜல்லி கற்களை மட்டும் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர் அந்த சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்களில் பட்டு ஜல்லி கற்கள் தெறித்து பக்கத்தில் உள்ள நபர்களின் மீது விழுந்து காயம் ஏற்படுகிறது என்றும் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அதே பள்ளத்தின் அடியில் இருக்கும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு இருப்பதால் தண்ணீர் கசிந்து சாலையில் தேங்கி நிற்கிறது எனவே நகராட்சி நிர்வாகம் அந்த குழாய் உடைப்பை சரி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.