தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்க ஆலோசனை கூட்டம்

577பார்த்தது
தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்க ஆலோசனை கூட்டம்
சோளிங்கர் கிழக்கு பஜார் பகுதியில் தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் நல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திறக்கு சோளிங்கர் நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். பெருமாள் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் லிங்கன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

இதில் நாதஸ்வரம், தவில் இசை மற்றும் முடி திருத்தம் செய் யும் நலிவுற்ற குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். படித்த இளைஞர்கள் தொழில் செய்ய கடனுதவி வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக நாதஸ்வரம், தவில் மற்றும் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்தல். இந்த சமூகத்தை சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு நலத்திட்டம் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக 2024 ஜனவரி முதல் கட்டிங், சேவிங், மொட்டை உள்ளிட்டவைக்கான புதிய விலைப்பட்டியலை வழங்கினர். சங்க நிர்வாகிகள் பெருமாள், சீனிவாசன், பாலு, முருகன், சேகர், நரசிம்மன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி