கங்காளநாத ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!

59பார்த்தது
கங்காளநாத ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!
திமிரி -ஆரணி சாலையில் உள்ள கெங்காராம் சாமி மடத்தில், கற்பகவல்லி உடனுறை கங்காளநாத ஈஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு மற்றும் சோமவாரத்தை முன்னிட்டு மூலவர் கங்காளநாதருக்கு சிறப்பு பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வந்த புனித நீரை கலசத்தில் வைத்து பூஜித்து, புனித நீரை கோவிலை சுற்றி எடுத்து வந்து மூலவர் கங்காளநாத ருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த னர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :