நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூல மாக, சோளிங்கர் அருகே பாண்டியநல்லூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ரகோத்தமன் என்பவரது ஆதிலட்சுமி என்ஜினீயரிங் ஒர்க்ஸ் தொழிற்சாலைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில், சுற்றுச்சூழல் மேம்பாட் டிற்காக சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை காவேரி கூக்குரல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாபு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கிராம துணைத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.