ஆயர்பாடி அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்!

56பார்த்தது
ஆயர்பாடி அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்!
காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது. ஓச்சேரி ஊராட்சி மன்றதலைவர் சங்கீதா ஜெயகாந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிவேதிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜனார்த்தனன் வரவேற்றார். ஆயர்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி கோவிந்தன் கலந்துகொண்டு குத்துவி ளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

மேலும் எழுத்துப்போட்டி, விளையாட்டு, ஓவியப்போட்டி உள்ளிட்டவைகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பாணாவரம் அடுத்த புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாலயமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பவானந்தம். ஊராட்சி மன்றதலைவர் லோகநாயகி விநாயகம், ஒன்றிய கவுன் சிலர் ராணி சேட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், பள்ளி மேலாண்மை குழுதலைவர் சரஸ்வதி, ஊராட்சி மன்றதுணைத்தலைவர் அஞ்சலி பாண்டியன், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி