லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி!

532பார்த்தது
லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி!
காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகரும்பூர் வழியே செல்லும் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நின்றிருந்த லாரி மீது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியது. இதில் சரக்கு வேன் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்தவர் கர்நா டக மாநிலம், தார்வாடு பகுதியை சேர்ந்த மாலிக்ஜன் (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி