வாலாஜாபேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரு பிரிவினர் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து, இந்த சமபவத்தால் ஊரில் இரு தரப்பு மோதல் ஏற்படும் எனக்கூறி, அந்த சிலையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம்நேற்று ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் மனு கொடுத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.