சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்!

70பார்த்தது
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்!
ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பில், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த ஊர்வலத்தை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, தனியார் மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூ ஆகியோர் கொடியசைத்தும், புறாக்களை பறக்கவிட்டும் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து தொடங்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை நுழைவு வாயிலில் முடிவடைந்தது.

இதில் மருத்துவமனை ஊழியர்கள் ஹெல்ெமட் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையில் ரத்த வங்கியை போலீஸ் சூப்பிரண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி