தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டம்!

72பார்த்தது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டம்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைசிறப்பு கூட்டம் அரக்கோணம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் கே. எம். தேவராஜ் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் மான்மல் முன்னிலை வகித்தார். நகர பொருளாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும். பள்ளிப்பட்டு, திருத்தணியை இணைத்து அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும்.

அரக்கோணம் தாலுகாவில் சிப்காட் அமைத்து இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். மணியக்கார தெரு, மசூதி தெரு குடியிருப்புக்கு அருகே உள்ள ரயில்வே தடுப்பு சுவரை அகற்றி ரயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சிறப்பு கூட்டம் அரக்கோணம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும். பள்ளிப்பட்டு, திருத்தணியை இணைத்து அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி