அரக்கோணம்: ரயில் பயணிகளிடம் திருடி வந்தவர் கைது!

53பார்த்தது
அரக்கோணம்: ரயில் பயணிகளிடம் திருடி வந்தவர் கைது!
அரக்கோணம் ரயில்வே போலீசார் ரயில் நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 2-வது பிளாட்பாரத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர், அரக்கோணத்தை அடுத்த ஆத்தூர் கிரா மத்தை சேர்ந்த நாகமுத்து மகன் மாரியப்பன் (வயது 42) என்பதும், ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டு சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி