முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்தியா கூட்டணி- GK வாசன் பேட்டி

60பார்த்தது
குடியாத்தத்தில் நடந்த தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து த. மா. கா. தலைவர் ஜி. கே. வாசன் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அமையும் அரசில் இருந்து பல நல்ல திட்டங்களை பெற்றுத்தர ஒரு வலுவான வேட்பாளர் தேவை என பொதுமக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்பவர் ஏ. சி. சண்முகம்தான் என மக்களுக்கு நன்றாக தெரிகிறது. தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி வருகை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் வாக்கு கிடைக்கும். கடந்த 10 ஆண்டு காலமாக இந்திய மக்கள் பிரதமர் மோடி தலைமையை ஏற்றுக் கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அவருடைய வெற்றியை உறுதி செய்து இருக்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்தியா கூட்டணி. கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் கிரியும் பாம்பும் போல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் கைகோர்த்து உள்ளனர். தமிழக மக்களை இந்தியா கூட்டணி ஏமாளியாக நினைக்க வேண்டாம். உங்களை தமிழக வாக்காளர்கள் ஏமாளி ஆக்கி விடுவார்கள், என கூறினார்.

தொடர்புடைய செய்தி