பேரணாம்பட்டு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது!

53பார்த்தது
பேரணாம்பட்டு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சஞ்சய் (22). இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த சிபிராஜ் (24), சுகன் (22) ஆகியோர் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றி ஆத்திரமடைந்த சிபிராஜ், சுகன் ஆகியோர் சஞ்சய்யை கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சஞ்சய் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து சிபிராஜ், சுகன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி