வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கே. வி. குப்பம் தாலுகா கீழ்ஆலத்தூர், கே. ஏ. மோட்டூர் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சி. தண்டபாணி தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஈ. வாசுதேவன், முன்னாள் தலைவர் செ. கு. வெங்கடேசன், கீழ்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி. ஆர். சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஊரக வளர்ச்சி அலுவலர் வேலு முகாம் குறித்து பேசினார்.
முகாமில் மரக்கன்று நடுதல், மருத்துவ முகாம், நீர்நிலைகளை பராம ரித்தல், கிராம வளர்ச்சி, கே. ஏ. மோட்டூர் ஏரிக்கரை, அம்மன் கோவில் பகுதிகளில் முட்செடிகளை அகற்றுதல், வளாகத் தூய்மைப் பணிகள், காய்கறி தோட்டம் அமைத்தல், பொருளாதார கணக்கெடுப்பு போன்றவை நடைபெற்றன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் து. ரா. முத்துபவானி, வினோத்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.