நகை கடையில் நகை வாங்குவது போல நடித்து 2.5 சவரன் நகை திருட்டு

53பார்த்தது
What: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் நகை வாங்குவது போல் கடைக்குள் வந்து மோதிரம் பிரேஸ்லெட் செயி0ன் உள்ளிட்ட நகைகளின் விலையை கேட்டுள்ளார்.

பிறகு பணம் குறைவாக இருப்பதாகவும் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து வருவதாகவும் கூறி, கடைக்கு வெளியே சென்றுள்ளார். பிறகு அவர் நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு வரவில்லை.

பின்னர், கடையில் இருந்த நகைகளை மதிப்பீடு செய்யும் போது 2. 5 சவரன் செயின் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நகைகளை வாங்குவது போல் நடித்து ஊழியர்களை திசை திருப்பி தங்க செயினை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

மேலும் இது குறித்து கடை உரிமையாளர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி