வேலூர்: 2 கிராமங்களில் மாடு விடும் விழா ஒத்திவைப்பு

4997பார்த்தது
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகாவில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாடு விடும் விழா நடைபெறுவது வழக்கம். அதில் மேல்மாயில், கீழ் முட்டுக்கூர் போன்ற கிராமங்களில் நடைபெறும் விழா மாவட்டத்திலேயே அதி விமர்சையாக நடைபெறும். மேற்கண்ட கிராமங்களில் பார்வையாளர்களுக்கு காயங்கள் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற சம்பவங்களாலேயே காப்பீடு தொகை உயர்த்தி இருப்பதாக மாடு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது கே.வி. குப்பம் தாலுகா வேலம்பட்டு கிராமத்தினர் இன்றும், கெம்மாங்குப்பம் கிராமத்தினர் 24ஆம் தேதியும் மாடு விடும் விழா நடத்த திட்டமிட்டனர். அதற்காக காப்பீடு தொகை செலுத்தி அனுமதி கூறியிருந்தனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் மேற்கண்ட இரண்டு கிராமங்களில் தேதி குறிப்பிடாமல் மாடு விடும் விழாவினை ஒத்தி வைத்துள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி