கோயில் இடம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

72பார்த்தது
கோயில் இடம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
கேவி குப்பம் அடுத்த திருமணி கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து சுற்றுச்சூழல் எழுப்ப கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அளவீடு செய்த பொழுது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கோவில் இடத்தில் மாட்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தை பயன்படுத்தி வருவதால் கொட்டகையை அகற்ற முடியாது என கூறி வந்துள்ளனர். எனவே வருவாய்த்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் நேற்று தாசில்தார் கலைவாணி தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பொழுது கோவில் சுற்றுச்சுவர் அமைக்க அந்த மாட்டு கொட்டகை இடையூறாக இருப்பது தெரியவந்தது. எனவே அந்த ஆக்கிரமிப்பு அகற்ற ஒருவார அவகாசம் அளித்துவிட்டு அதிகாரிகள் சென்றனர். அப்பொழுது துணை தாசில்தார் பிரகாசம் விஏஓ தமிழ்வாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி