ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல்

76பார்த்தது
வேலூர் மாவட்டம்

கே. வி. குப்பம் பகுதியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலினால் ஒருவருக்கு கத்தி வெட்டு-இரண்டு பேர் படுகாயம்.

வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த சீதாராமன் பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

அதில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதில் கே. வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னராசு, குமார் மற்றும் புருஷோத்தமன் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வைக்கின்றனர்.
இது குறித்து DSP ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இது சம்பந்தமாக நவீன், மனோஜ் ஆகியோர் கைது மேலும் காயம் அடைந்த மூன்று பேர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் இது போன்று சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிய விட்டது இதுபோன்று மோதல் உருவாகும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் மற்றும் நள்நெஞ்சகாரர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி