டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

74பார்த்தது
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் பசுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது அப்பகுதியில் இருந்த டீக்கடை ஒன்றில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் மருத்துவர் பசுபதி பேசுகையில்,

நான் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். 14 ஆண்டுகாலம் அரசு மருத்துவராக பணியில் இருந்தேன் அதை ராஜினாமா செய்துவிட்டு இந்த எம். பி தேர்தலில் வேட்பாளராக நிற்கிறேன் எனக்கு ஓட்டு அளித்து வெற்றிப் பெறச்செய்யுங்கள்.
உ ங்களுக்காக நான் படுபடுவேன்.
முன்னதாக ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ரோஜா மலர்களை தூவி அதிமுகவினர் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி