பேரணாம்பட்டில் கிணற்றில் விழுந்த காளை மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பேரணாம்பட்டு டவுன் ஜெ ஜெ நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் இவரது காளைமாடு அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது இது குறித்த தகவல் அறிந்த பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் உதயசந்தர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த காளை மாட்டை உயிருடன் மீட்டு ஒப்படைத்தனர்.