பொன்னை அருகே சாராயம், கஞ்சா விற்ற வாலிபர் கைது

1571பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னையடுத்த பரமசாத்து பகுதியில் பொன்னை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பொன்னை பரமசாத்து பகுதியில் கஞ்சா கள்ள சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது முட்புதரில் பதுக்கி இருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து பைக்கில் தப்பினார். அந்த வாலிபரை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சினிமா பானியல் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பரம சாத்து காலனி பகுதியை சேர்ந்த வீனா தீபக் என்பதும் இவர் முப்புதரில் கள்ள சாராயம் கஞ்சா பதுக்கி வைத்திருந்து விற்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அங்கு இந்த வாலிபர் முப்புதரில் பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் சாராயம் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி