டாக்டர் தம்பதி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

4009பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு கோபாலபுரத்தை சேர்ந்தவர் காமேஷ். இவருடைய மனைவி சுமிதா. கணவன் மனைவி பல் மருத்துவர்கள். இவர்களுக்கு சொந்தமான கிளினிக் கழிஞ்சூர் சாலையில் உள்ளது. காமேஷ் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி மதியம் சுமிதா வீட்டின் கதவை பூட்டிவிட்டு கிளீனிக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்த பொழுது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒன்பது பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சுமிதா விருதம் பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வழவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகை சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி