இடிந்த வீடுகளில் உணவு சமைத்து சாப்பிடும் அவலம்

54பார்த்தது
கடந்த 40 ஆண்டுகளாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் வசித்து வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை வீடுகளை இடித்துவிட்டு வெளியேற்றி நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதியில் கட்டியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கால அவகாசம் முடிந்து விட்டதாக இடிப்புக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அப்பகுதியில் வசித்து வந்த 17 குடும்பத்தினருக்கு மட்டும் காட்பாடி அடுத்த புதூர் கிராமத்தில் அரசின் இலவச வீட்டு மனையும் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு ஆள் நடமாட்டமேயில்லாத இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டதாக கூறியும் இன்னமும் அதற்கு பட்டா வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழை மற்றும் கூலி தொழிலாளிகளான அப்பகுதி மக்கள் கடன் வாங்கியும் வட்டிக்கு பணம் பெற்றும் பல்வேறு கனவுகளோடு ஆசையாசையாய் கட்டிய வீடு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டதால் வீடுகளை இழந்த அம்மக்கள் பொது இடங்ககளிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
உறவினர்களின் வீடுகளும் சிறியதாக இருப்பதால் அங்கிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது இடித்து தள்ளப்பட்டுள்ள அந்த வீடுகளிலேயே கொட்டும் பணியிலும் உணவு சமைத்து அங்கேயே உறங்கியும் வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி