வந்தேபாரத் ரயிலில் காட்பாடி வந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர்

84பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி
ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

வந்தே பாரத் ரயில் தற்போது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது இந்த ரயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த ரயில் திட்டத்தினை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர்.
பிரித்து ஆள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
மேலும் விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது எனக் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி